ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனை ராணுவ வீரர்கள், தேசிய மீட்புப்படையினர் இணைந்து பத்திரமாக மீட்டனர்.
ராஜோரி பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியில் ஓடும் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அப்பகுதிக்கு சென்றிருந்த சிறுவன் ஒருவன், வெள்ளத்தில் சிக்கிக்கொண்டான். அங்கிருந்த மக்கள் எவ்வளவோ முயன்றும் சிறுவனை மீட்க முடியவில்லை.
எனவே, உடனடியாக தேசிய மீட்புப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், ராணுவ ஹெலிகாப்டரின் உதவியுடன் சிறுவனை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
கனமழை தொடர்ந்து வருவதால் நீர்நிலைகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.