சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
நடிகர் சூர்யா தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினர். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கச் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டனர்.
அப்போது வீட்டின் பால்கனியில் இருந்து வெளியே வந்த சூர்யா கையசைத்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.