புதுச்சேரியில் கிரிக்கெட் அசோசியேஷனை கண்டித்து உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிரிக்கெட் அசோசிசேஷன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் புதுச்சேரி பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொடரில் வில்லியனூர், ஊசுடு, ஒயிட் டவுன், ஏனாம், மாஹே, காரைக்காலைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த அணிகளில் வெளிமாநில வீரர்கள் போலி சான்றிதழ் மூலம் இணைந்து விளையாடி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் போலி சான்றிதழ் அளித்து விளையாட அனுமதித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, புதுச்சேரி சட்டசபை அருகே 100க்கும் மேற்பட்ட உள்ளூர் வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.