திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 5 நபர்களை வெறி நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் 2 வயது குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தது. அப்போது அங்குச் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று குழந்தையின் முகத்தில் கடித்தது.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 4 பேரை வெறிநாய் துரத்திச் சென்று கடித்ததில் அவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.