தேனி மாவட்டத்தில் கத்திக்குத்து காயத்தால் பல்லுறுப்பு சேதமடைந்த ராணுவ வீரருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவர்களை இந்திய ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர்.
கம்பத்தைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த மாதம் விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். அப்போது, சிலருடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கப்பட்ட சரவணக்குமார் உடனடியாக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சரவணக்குமாருக்கு பல்லுறுப்பு சேதமடைந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
உடனடியாக, அறுவை சிகிச்சை மேற்கொண்டு சரவணக்குமாரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர், 2 வாரங்கள் சிகிச்சை பிறகு சரணவக்குமார் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு சரவணக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.