அம்பத்தூரில் குடும்ப அட்டைக்கு ஏஜென்ட் லஞ்சம் கேட்கும் ஆடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் உப கோட்டம் அம்பத்தூர் பகுதியில் உள்ள ரேசன் கடையில் குடும்ப அட்டை பெற்றுத் தருவதற்காக இடைத்தரகர் ஒருவர் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.
அதில், குடும்ப அட்டை பெற்றுத் தர 7 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், பிற இடங்களில் 10 ஆயிரம் ரூபாய் வாங்குவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இ-சேவை மையத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்குக் கொடுக்கவே இந்த தொகை கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்கவில்லை என்றால் வேலை நடக்காது எனவும் ஏஜென்ட் பேசியுள்ளார்.
இந்த ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.