ஈரோடு அருகே சாலையோரம் இளநீர் கடை வைத்திருந்த மூதாட்டியிடம் மேயரின் உதவியாளர் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு புதூரைச் சேர்ந்த சுலோச்சனா என்பவர் கொல்லம்பாளையம் பகுதியில் சாலையோரம் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது கடை அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வரும் மேயரின் உதவியாளரான சாந்தி என்பவர் இளநீர் கடை வைக்க 10 ஆயிரம் ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது.
பணம் தர மறுத்ததால் நெடுஞ்சாலைத்துறையினர் மூலமாக இளநீர் கடையை அகற்றியதாக சுலோச்சனா வேதனை தெரிவித்துள்ளார்.
இளநீர் கடை அகற்றப்பட்டதால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தமக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் மேயரின் உதவியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுலோச்சனா கேட்டுக்கொண்டுள்ளார்.