சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா முதல் சுற்றோடு வெளியேறினார்.
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி அந்நாட்டின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, தைவானின் லீ சியாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய லீ சியாங் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தோல்வியடைந்த இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறினார்.