விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செஞ்சி அடுத்த வல்லம் ஊராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் 19 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் வல்லம் ஏரி பகுதியில் குடிநீர் தேவைக்காக புதிய திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் திறந்தவெளி கிணறு பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து ஆய்வு செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.