தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனி ஆன்லைனில் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தேர்தல் காலங்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் மேளதாளத்துடனும், ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு கட்சியினர் வருவதாலும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து இந்தியத் தேர்தல் ஆணையம், ஆன்லைனில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதில் வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்கள், சுயவிவரங்கள், செல்போன் எண் உள்ளிட்டவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது