ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடித்துள்ள ஹரிஹர வீர மல்லு திரைப்படம் வெளியான நிலையில் ஹைதராபாத்தில் ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரிஹர வீர மல்லு திரைப்படம் சிறப்புக் காட்சியுடன் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த ரசிகர்கள் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கின் முன்பு குவிந்து இருந்தனர்.
அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது.