காசாவில் மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழந்ததாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை காரணமாக, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது ஒரு புறமிருக்க காசாவில் பட்டினியால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழந்ததாக ஐநா வேதனை தெரிவித்துள்ளது.