2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, இஸ்ரோ 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இன்று மாநிலங்களவையில் அவர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில்,
2020-ம் ஆண்டுக்குப் பின்னர் பதிவுசெய்யப்பட்ட விண்வெளி புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை விரைவாக 300- க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
2022 நவம்பர் முதல் 2024 மே மாதம் வரை, இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனங்களிலிருந்து இரண்டு வெற்றிகரமான துணை சுற்றுப்பாதை விமானங்களை எளிதாக்கியுள்ளது. கூடுதலாக, ஆறு அரசு சாரா நிறுவனங்கள் பதினான்கு செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்தி, அவற்றின் திறன்களை நிரூபித்துள்ளன.
விண்வெளித் துறை சீர்திருத்தங்களின் தாக்கத்தை அளவிடுவதற்கான மற்றொரு அளவுரு, வசதி மற்றும் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையாகும். இன்-ஸ்பேஸ் பல்வேறு நடவடிக்கைகளுக்காக 380 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 658 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது..
அதில் மார்ச் 31, 2025 நிலவரப்படி, விண்வெளித் துறை சீர்திருத்தங்களுக்குப் பிறகு 77 அங்கீகாரங்களை இன்-ஸ்பேஸ் வழங்கியுள்ளது, 79 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது, 31 தரவு பரப்புபவர்களுக்கு 59 பதிவுச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது, 91 கூட்டாகச் செயல்படுத்தல் திட்டங்கள் மற்றும் 79 தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.