தொழிலதிபர் அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஒருசில வங்கிகளிடமிருந்து கூட்டாக 31 ஆயிரத்து 580 கோடியைக் கடனாகப் பெற்றுள்ளன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாங்கிய இந்த கடனில் 44 சதவீதத்தை, ஏற்கெனவே வாங்கிய கடன் நிலுவையைத் திரும்ப செலுத்தப் பயன்படுத்தியதாகத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கியின் மோசடி கண்டறியும் குழு அளித்த அறிக்கை தெரிவித்தது.
மேலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ என வகைப்படுத்தி, அதன் முன்னாள் இயக்குநா் அனில் அம்பானியை மோசடியாளர் எனவும் எஸ்பிஐ வங்கி அறிவித்தது.
இந்த நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.