அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மாற்றி அனுப்பப்பட்டதாக எழுந்த இங்கிலாந்தின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
விபத்தில் பலியான 2 இங்கிலாந்து நாட்டவரின் உடல்களுக்குப் பதிலாகத் தவறான உடல் அவர்களது குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லண்டன் விசாரணை அதிகாரி டிஎன்ஏ பரிசோதனை செய்தபோது இது வெளிச்சத்துக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக பிரிட்டிஷ் பத்திரிகை வெளியிட்ட செய்தியை இந்தியா நிராகரித்ததோடு, இது ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளது.