புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிராக்டர் ஓட்டி கவனம் ஈர்த்தார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி பிரச்சாரம் செய்வதற்காக, கந்தர்வகோட்டைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவருக்கு 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் வரவேற்பளித்தனர்.
அப்போது, தானே டிராக்டர் ஒன்றைச் சிறிது தூரம் ஓட்டிச்சென்ற எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை நோக்கிக் கையசைத்தார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரும் உடன் அமர்ந்திருந்தனர்.