கர்நாடகா மாநிலம் மைசூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீராம்புராவில் முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது உரசியது.
இதில் நிலைதடுமாறிய முதியவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.