திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அந்த யானைகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், கிராம மக்கள் உதவியுடன் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.