4 ஆயிரத்து 78 நாட்கள் பதவியில் இருந்து இந்தியாவில் அதிக காலம் பிரதமராகப் பணியாற்றிய இரண்டாவது நபர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பதவி வகித்து சாதனை படைத்தார்.
இவரை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 4 ஆயிரத்து 77 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்து 2ஆம் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 4 ஆயிரத்து 78 நாட்கள் பதவியில் இருந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியாவின் வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய 2வது நபர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
தொடர்ந்து மூன்று மக்களவை தேர்தல்களில் அந்தந்த கட்சிகளை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதில் நேருவின் சாதனையைப் பிரதமர் மோடி, சமன் செய்துள்ளார்.
பாஜக தலைவர், பிரதமர் என இரண்டு முழு பதவிக் காலத்தை நிறைவு செய்த காங்கிரஸ் அல்லாத ஒரே தலைவர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 3 முறையும், மக்களவை தேர்தல்களிலும் 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார்.