புதுச்சேரியில் சொத்துக்காகச் சகோதரியின் கணவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த தம்பி உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடி பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நகரச் செயற்குழு உறுப்பினரான துரை என்பவர், திலாஸ்பேட்டை பகுதியில் ஜல்லி-மணல் விற்பனை செய்யும் நிலையத்தை நடத்தி வந்தார்.
கடந்த 22ஆம் தேதி தனது விற்பனை நிலையத்தில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல், துரையை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், துரையின் மனைவி ரேகாவின் தம்பி சூர்யா, சொத்து பிரச்னையில், நண்பர்களுடன் சேர்ந்து துரையை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, பட்டானுார் பகுதியில் பதுங்கியிருந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கைதானவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சூர்யா உள்ளிட்ட 9 பேர் காலாப்பட்டு மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை, சீர்த்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.