கோவை மாவட்டம் பிஎன் புதூரில் வீட்டு நுழைவாயில் கதவைத் திறக்க முடியாத வகையில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால், வீட்டின் உரிமையாளர் கடும் அவதி அடைந்துள்ளார்.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயால் தங்கள் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே செல்வதற்குச் சிரமப்படுவதாகவும், வாகனங்களை உள்ளே கொண்டு செல்ல முடியவில்லை எனவும் வீட்டின் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.