லண்டனில் செய்தியாளர் சந்திப்பின்போது மொழி பெயர்க்க, மொழி பெயர்ப்பாளர் அடைந்த சிரமத்தைப் போக்க, பிரதமர் மோடி செய்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரசுமுறை பயணமாகப் பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுப் பிரதமர் ஸ்டார்மருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது ஸ்டார்மர் பேசுவதை மொழி பெயர்ப்பாளர் ஒருவர் ஹிந்தியில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து சில சொற்களை ஹிந்தியில் மாற்றுவதில் மொழி பெயர்ப்பாளருக்குச் சிரமம் ஏற்பட்டது.
இதை அறிந்த பிரதமர் மோடி, “கவலைப்பட வேண்டாம், இடையில் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்” எனக்கூறி மொழி பெயர்ப்பாளரின் சிரமத்தைத் தவிர்த்தார்.
ஆனால் மொழி பெயர்ப்பாளர், சற்று வெட்கப்பட்டு, தடங்களுக்காக மன்னிப்பு கேட்டார். அதற்குப் பிரதமர் மோடி, உறுதியுடன், ஒன்றும் “பிரச்சனை இல்லை” எனப் பதிலளித்தார். சர்வதேச மேடையில் பிரதமர் மோடியின் இந்த செயல் அங்கிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.