நீலகிரி மாவட்டம் உதகையில் லாரி மோதி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
கர்நாடகாவைச் சேர்ந்த மோனிகா தாஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் உதகைக்குச் சுற்றுலா வந்திருந்தார்.
உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி மோதியதில், 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
இதில் மோனிகா தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நால்வர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.