இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், டிவிஎஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நார்டன் மோட்டார் சைக்கிள்களை பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் கெய் ஸ்டார்மர் நேரில் பார்வையிட்டனர்.
அப்போது நார்டன் V4 CR ரக மோட்டார் சைக்கிள்கள் குறித்து பிரதமர் மோடியுடன் டிவிஎஸ் நிர்வாக இயக்குநர் சுதர்ஷன் வேணு கலந்துரையாடினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டிவிஎஸ் நிர்வாக இயக்குனர் சுதர்ஷன், இரு பிரதமர்கள் முன்னிலையில் நார்டன் மோட்டார் சைக்கிள்களை காட்சிப்படுத்தியதில் பெருமைப்படுவதாக கூறியிருக்கிறார்.
டிவிஎஸ் நிறுவனம் 2020ம் ஆண்டு நார்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை 153 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கியது. பிராண்டை புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தது.
2025ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் நார்டன் மோட்டார் சைக்கிளின் ப்ரீமியம் மாடல்களை அறிமுகப்படுத்த டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், நார்டன் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.