அன்புமணியின் நடைப்பயணத்திற்குத் தடை விதித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வருகிறது.
2 பேரும் தனித்தனியாக பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதாக அன்புமணி அறிவித்தார். அதன்படி, திருப்போரூரில் அன்புமணி நடைப்பயணத்தைத் தொடங்கினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், இந்த பயணத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று டிஜிபிக்கு கோரிக்கை விடுத்தார். இதன் காரணமாக நடைப்பயணத்துக்குத் தடை விதித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.