வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் வாழ்நாள் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து, இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் களம் கண்ட ரிஷப் பண்ட் அரை சதம் விளாசினார். இதன் மூலம் வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.