உலக சாம்பியன்ஸ் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.