ராணிப்பேட்டை அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வன்னிவேடு கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில், ஆடி மாத திருவிழாவை ஒட்டி பக்தர்கள் காப்புக் கட்டி விரதமிருந்தனர்.
இதனை தொடர்ந்து பாலாற்றங்கரையில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக பூ கரகம் மற்றும் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து கோயிலை அடைந்தனர். இதனையடுத்து அக்னி குண்டத்தில் இறங்கி திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.