மதுரை மாவட்டம், கல்மேடு பகுதியில் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் செல்லும் குழாய்களில் கழிவு நீர் வெளியேறி குடியிருப்பைச் சூழ்ந்துள்ளது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சுத்திகரிப்பு நிலையம் கல்மேடு பகுதியில் செயல்பட்டு வருகிறது. அண்ணா நகர் , வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கழிவு நீர் இங்குக் கொண்டு வரப்படுகிறது.
இதன் கிளைக்குழாய் சேதமடைந்து காணப்படுவதால் கழிவு நீர் வெளியேறிக் குடியிருப்பைச் சூழ்ந்துள்ளது.
இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்த பொதுமக்கள் குழாய் உடைப்பை விரைவில் சரி செய்ய வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.