மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்போன் கவுண்டரில் ஏற்பட்ட சர்வர் கோளாறை தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.
இவர்கள் கொண்டு வரும் செல்போன்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகக் கோயிலின் வெளிப்பிராகத்தில் உள்ள சிறப்புக் கவுண்டரில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அங்கு ஏற்பட்ட சர்வர் கோளாறு காரணமாக ரசீதுகள் கைகளில் எழுதிக் கொடுக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து இது குறித்து தமிழ் ஜனத்தில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் சர்வர் கோளாறை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்தனர்.