தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகத் திருவண்ணாமலை அருகே ஒளிராமல் இருந்த உயர் கோபுர மின் விளக்கு சரி செய்யப்பட்டது.
செங்கம் மும்முனை சந்திப்பு சாலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு நீண்ட நாட்களாக ஒளிராமல் இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. இதனையடுத்து அதிகாரிகள் மின் விளக்கைச் சரி செய்தனர்.
தற்போது மின் விளக்கு ஒளிர்ந்து வெளிச்சம் வந்ததால் மகிழ்ச்சியடைந்த மக்கள், தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.