வரதட்சணை கொடுமையால் திருப்பூரைச் சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பிணை கோரி அவரது கணவர், மாமனார், மாமியார் தாக்கல் செய்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூவரின் ஜாமீன் மனுவைத் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனைதொடர்ந்து 3 பேரும் பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 30-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.