யூடியூப், இன்ஸ்டாவுக்கு செக் வைத்த மஸ்க் : 9 ஆண்டுக்குப் பின் மீண்டு(ம்) வருகிறது VINE!
Sep 20, 2026, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

யூடியூப், இன்ஸ்டாவுக்கு செக் வைத்த மஸ்க் : 9 ஆண்டுக்குப் பின் மீண்டு(ம்) வருகிறது VINE!

Murugesan M by Murugesan M
Jul 26, 2025, 10:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிக்டாக், அறிமுகமான காலத்தில் சமூக வலைத்தளங்களில் கொடிகட்டிப் பறந்த VINE app, திடீர் சறுக்கலால், கரடி தூக்கத்திற்குச் சென்றது. தற்போது  AI தொழில்நுட்பத்துடன் புதுப்பொலிவோடு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது,  பயனர்களிடையே எதிர்பார்ப்புகளை எகிறச் செய்துள்ளது.

We’re bringing back Vine, but in AI form…. இதுதான் எலான் மஸ்க்கின் அதிரடியான புதிய அறிவிப்பு.

அமெரிக்காவின் Rus Yusupov, Dom Hofmann, Colin Kroll ஆகியோரால் 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இந்த VINE app. வெறும் 6 நொடிகள் கொண்ட காணொளிகளை மட்டுமே இதில் பதிவேற்ற முடியும் என்றாலும், குறுகிய காலத்தில் பல கோடி பயனர்களைப் பெற்று மக்கள் மத்தியில் பிரபலமானது. மூன்றே ஆண்டுகளில் 200 மில்லியன் பயனர்களைப் பெற்றது.

VINE அப்போதே பல பிரபலங்களை ஈர்த்து, பல வைரல் டிரெண்ட்-ஐ உருவாக முக்கிய காரணியாக இருந்தது. குறிப்பாக  VINE தளத்தில் பூனை மற்றும் நாய்க் குட்டி வீடியோக்கள் மிகவும் பிரபலம் வாய்ந்தவை… இன்றளவும் யூடியூப்-ல் பலர்  VINE வீடியோ தொகுப்பைப் பார்த்து ரசிக்க இதுவே காரணம்.

பல்வேறு காரணங்களால் VINE app-இன் வளர்ச்சி முடங்கிய நிலையில், 2016ம் ஆண்டு பயனர்கள் புதிய வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது என்று VINE  அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. VINE ஆப்பை டிவிட்டர் வாங்கிய நிலையில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யமல் கிடப்பில் போட்டது.

இந்த நிலையில், 2022ம் ஆண்டு டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்,  இதை தற்போது ஏஐ உதவியுடன் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளார்.

நீண்ட யோசனைக்குப் பிறகு VINE appஐ கொண்டுவரத் தீர்மானித்த எலான் மஸ்க், கருத்துக் கணிப்பை நடத்த, பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆம் என்று பதிலளித்திருந்தது இணையத்தில் பேசு பொருளானது. இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பின் VINE app-ஐ புதுப்பொலிவுடன் கொண்டுவருவதாக அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.

ஏற்கனவே மக்கள் மத்தியில் மாஸ் காட்டிய  VINE, மீண்டும் அறிமுகமாகும் பட்சத்தில்  யூடியூப் ஷார்ட், இன்ஸ்டாகிராம் ரீல் போன்றவைகளுக்கு கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Tags: Musk puts a check on YouTubeInstagram: VINE is making a comeback after 9 yearsயூடியூப்இன்ஸ்டாவுக்கு செக் வைத்த மஸ்க்மீண்டும் வருகிறது VINE
Share
Tweet
SendShare
Previous Post

18,000 அடி உயரத்தில் சரித்திர வெற்றி : கார்கில் போர் – 26வது வெற்றி தினம்!

Next Post

ரிதன்யா வழக்கு – ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க ஆணை!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவில் ஹாஸ்பிடாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி : பாரதி மெராகியின் Tier 2, Tier 3 நகரப் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies