தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துளளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கார்கில் விஜய்திவாஸ் அன்று, கார்கில் போரின் போது நமது தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த நமது வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலையும் தியாகத்தையும் நினைவு கூர்வோம் என தெரிவித்துள்ளார்.
அவர்களின் வெற்றி வெறும் இராணுவ வெற்றி அல்ல; அது மீள்தன்மை, தேசபக்தி மற்றும் அசைக்க முடியாத தேசிய பெருமை ஆகியவற்றின் மரபு என கூறியுள்ளார்.
தலைமுறைகளை ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவின் உணர்வை நிலைநிறுத்த நினைவூட்டும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.