தாம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில், மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முகாம் நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில், தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 13 துறைகள் மற்றும் 43 சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
ஆனால், மனு கொடுப்பதற்காகக் குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.