சேலத்தில் 130 ஆண்டுகளாக வழிபட்டு வந்த சாமி சிலைகளை எடுத்துச் சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்.
சாமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் தானும், தன் பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்லத்தங்காள் உள்ளிட்ட சாமி சிலைகளை வணங்கி வந்ததாகவும் அதனை விஏஓ குமார் என்பவர் எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியவர் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.