தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, விமான நிலையம், துறைமுகம், ரயில்வே, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்காக அர்ப்பணிக்க உள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம், வஉசி துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளத்தைத் தொடங்கி வைக்கிறார்.
அதேபோல் சேத்தியாத்தோப்பு-சோழபுரம் பிரிவின் 4 வழிச்சாலை, தூத்துக்குடி துறைமுக பிரிவின் 6 வழிச்சாலையையும் மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கிறார்.
மதுரை – போடிநாயக்கனூர் ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டத்தையும், நாகர்கோவில் – கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதையையும் அவர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
தொடர்ந்து ஆரல்வாய்மொழி, திருநெல்வேலி, மேலப்பாளையம் ரயில் பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் அவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகு 3 மற்றும் 4ல் இருந்து மின்சாரத்தை வெளியேற்றும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.