தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!
Sep 12, 2025, 10:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

Web Desk by Web Desk
Jul 26, 2025, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக பேருந்து, ரயில், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து கொண்ட நகரமாகத் தூத்துக்குடி திகழ்கிறது.

தூத்துக்குடியில் தொழில்துறை வளர்ச்சி அதிகரித்து வருவதாலும், பயணிகளின் தேவை காரணமாகவும் வாகை குளத்தில் உள்ள விமான நிலையத்தைப் புதுப்பிக்க வேண்டிய தேவை எழுந்தது.

அதன்படி, 381 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆயிரத்து 350 மீட்டாராக இருந்த ஓடுதளத்தின் நீளம், தற்போது, 3 ஆயிரத்து 115 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், சென்னைக்கு அடுத்தபடியாக  மிக நீண்ட ஓடுதளம் கொண்ட விமான நிலையமாகத் தூத்துக்குடி உருவெடுத்துள்ளது. மேலும், அங்கு சுமார் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய முனையமும் அமைக்கப்பட்டுள்ளது.

17 ஆயிரத்து 341 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள இந்த முனையத்தின் மூலம் அதிக விமானங்களைக் கையாள முடியும். இந்த முனையத்தில், கட்டுப்பாட்டுக் கோபுரம், விமான போக்குவரத்து கண்காணிப்பு, தீயணைப்பு கட்டடம் உள்ளிட்டவையும் கட்டப்பட்டுள்ளன.

இந்த முனையத்தின் விமான புறப்பாடு பகுதியில், 21 செக்-இன் கவுண்டர்களும், 4 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இந்த புதிய முனையத்திற்குச் செல்ல ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்பு சாலையும் போடப்பட்டுள்ளது. இந்த புதிய முனையம் 4 ஸ்டார் அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது.

விமானம் வரை பயணிகள் நடந்து செல்வதைத் தடுக்கும் வகையில், 3 aerobridge-கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 5 விருந்தினர் அறைகள், பெரிய உணவகம், மருந்தகம், ஸ்பா மையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, சூர்ய சக்தி விளக்குகள், இலவச வைஃபை போன்ற பல்வேறு வசதிகளும் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விமான நிலையத்தில் இனி ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். அதற்கு ஏற்றவாறு பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, 500 பயணியர் வாகனங்களை நிறுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இதுவரை பகல் நேரத்தில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இரவு நேரங்களிலும் விமானங்களை இயக்க முடியும். பெரிய ஏர் பஸ், போயிங் விமானங்கள் வந்து செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள விமான நிலையத்தின் மூலம் பயணிகள் இனி மிகவும் இலகுவாகப் பயணம் மேற்கொள்ள முடியும். தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சிக்கும் இந்த விமான நிலையம் முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

Tags: pm modi newsதூத்துக்குடிRenovated airport in Thoothukudiபுதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்Thoothukudi NEWS TODAY
ShareTweetSendShare
Previous Post

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

Next Post

கார்கில் வெற்றி தினம் – டெல்லி போர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் மரியாதை!

Related News

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

வத்தலக்குண்டு அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை  கூடுதல் தொகை வசூல்!

மதுரை ஒரு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்த 17 கோடி ரூபாய் மதிப்பில் பலப்படுத்தப்பட்ட கண்மாயின் கரை!

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது – செங்கோட்டையன்

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!

இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் ஆபத்து : புதிய சட்டம் கொண்டு வருகிறது ட்ரம்ப் அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies