கார்கில் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள கார்கில் நினைவிடத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்.
1999ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் பகுதியை குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானுடன் இந்திய ராணுவம் போர் புரிந்து ஜூலை 26ல் அதில் வெற்றி பெற்றது. இந்த நாள் கார்கில் வெற்றி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவிடத்தில் போரின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் காவல் துறையினர் உட்பட பலரும் கலந்து கொண்டு நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தனர்.