உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் உள்ள சங்கூர் பாபாவின் உதவியாளர் சப்ரோஸின் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக உத்தரப் பிரதேசத்தின் மாதம்பூரைச் சேர்ந்த சங்கூர் பாபா என்ற ஜலாலுதீனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் அன்மையில் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரது சொத்துக்களை முடக்கி, சொந்தமான கட்டடங்களை இடித்து அகற்றும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் சங்கூர் பாபாவின் உதவியாளரான சப்ரோஸுக்கு சொந்தமான கட்டடங்களை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர்.