மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் சொகுசு கார் மீது ஏறி நின்று இளம் பெண் ஒருவர் ‘ஆரா பார்மிங்’ சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
ஓடும் காரில் பேனட்டின் மீது ஏறி நின்று, இந்தி பாடலுக்கு அவர் நடனமாடினார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சாகசத்தில் ஈடுபட்ட இளம்பெண் நாஷ்மின் சுல்டே என்பதும், காரை ஓட்டியது அவரது ஆண் நண்பர் அல்பேஷ் சேக் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.