அன்புமணி மேற்கொள்ளும் நடைப்பயணத்திற்கு டிஜிபி தடை விதிக்கவில்லை எனவும், திட்டமிட்டபடி நடைப்பயணம் நடைபெறும் எனவும் பாமக வழக்கறிஞர் பாலு விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அன்புமணியின் நடைப்பயணம் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
ஊடகங்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதை டிஜிபி அலுவலகமே தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட வழக்கறிஞர் பாலு, நடைப்பயணத்தின்போது அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக விளக்கம் அளித்தார்.
எனவே அன்புமணியின் நடைப்பயணம் எந்த தடையுமின்றி திட்டமிட்டபடி தொடரும் எனவும் வழக்கறிஞர் பாலு தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.