இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டுமென, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், தகவல் தொழில்நுட்ப போராளியாகவும், கற்றுத் தேர்ந்தவராகவும் இருப்பவர்களே, வருங்காலத்தில் ராணுவத்திற்குத் தேவைப்படும் வீரராக இருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.
எல்லைகளில் சண்டையிடவும், பாலைவனங்களில் சாமர்த்தியமாகச் செயல்படவும், ட்ரோன்களை அழிக்கவும், சைபர் தாக்குதல்களைச் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாகவும் வீரர்கள் இருக்க வேண்டும் என அனில் சௌகான் கூறினார்.