5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, வேண்டுமென்றே இரண்டு கால்களையும் மருத்துவர் வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் நீல் ஹாப்பர் என்பவர், 2019-ல் தனது கால்களை இழந்ததாகக் கூறி, 5 கோடியே 4 லட்சம் கேட்டு காப்பீட்டு நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், நீல் ஹாப்பர் வேண்டுமென்றே தனது இரண்டு கால்களையும் அகற்றியதாகக் கூறி காப்பீட்டு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது.
இதுகுறித்த விசாரணையில் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, தனது கால்களை வெட்டி அகற்றியதை மருத்துவர் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.