மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மதுரையைச் சேர்ந்த கிருத்திகா தங்கபாண்டி என்பவர் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்புச் செயலாளராக உள்ளார். இவருக்கு சொந்தமான ஆசிஸ் என்ற ஐடி நிறுவனம், தனக்கன்குளம் பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் GST வரி ஏய்ப்பு நடந்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பந்தப்பட்ட ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் 14 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர்.