கேரள மாநிலம் மலப்புரம் அருகே சாலையில் சென்ற சரக்கு வாகனத்தை காட்டு யானைகள் முட்டித் தள்ளிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் கருவரகுண்டு பகுதியில் மூன்று யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி நகரப்பகுதிக்குள் நுழைந்து. வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டனர்.
அப்போது ஆக்ரோஷமாக மிரண்டு ஓடிய யானைகள் சாலையில் வந்து கொண்டிருந்த வேனை தடுத்து நிறுத்தி முட்டி மோதி தூக்கி வீசி பந்தாடியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
பின்னர் அப்பகுதி மக்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடி விட்டன. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.