பாரதப் பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமை கொள்வதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திர நாயகன், நமது தமிழ் மண்ணின் பெருமையைக் கடல் கடந்து நிலைநாட்டிய சக்கரவர்த்தி ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது வெற்றி விழாவில் பங்கேற்பதற்காகவும், தூத்துக்குடி நவீன விமான நிலையத்தைத் திறந்து வைப்பதற்காகவும் இன்று தமிழகம் வருகை தரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடியை வருக வருகவென மனதார வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தமிழரின் அடையாளமான செங்கோலை நிறுவி, தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களுக்கு நீதி தவறாது நல்லாட்சி புரிந்து வரும் பாரதப் பிரதமர் அவர்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.