மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா – மாலத்தீவு நட்பின் முக்கியத்துவம் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக கூறியுள்ளார்.
உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதாகவும் இது நமது மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் ஆண்டுகளில் இந்த கூட்டாண்மையை ஆழப்படுத்த உள்ளதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.