பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் தோரிக் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஜனவரியில் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றிருந்தார். இயற்கை சூழ்ந்த இடத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றன.
அப்போது மாலத்தீவை சேர்ந்த 3 அமைச்சர்கள், பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை விமர்சித்த நிலையில், இந்தியர்கள் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்வதை புறக்கணித்தனர். இதனால், அந்நாட்டு சுற்றுலா துறை பெரும் இழப்பை சந்தித்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி தற்போது மாலத்தீவு சென்ற நிலையில் அந்நாட்டு சுற்றுலா துறை அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்..