போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு என்றும், தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது எனவும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் மதன் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரியில் 26-ம் ஆண்டு கார்கில் போர் வெற்றியை நினைவு கூறும் விதமாக, தீஷா பாரத் அமைப்பு சார்பில் மாற்றத்தின் சாம்பியன்கள் என்ற தலைப்பில் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கார்கில் போர் வெற்றியை நாடகம் மூலம் அரங்கேற்றம் செய்த 11 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் மதன் குமார் கலந்துகொண்டு, கார்கில் முதல் ஆப்ரேஷன் சிந்தூர் வரையிலான இந்திய ராணுவத்தின் அனுபவங்களை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். குறிப்பாக இந்திய ராணுவத்தின் வெற்றிக்கு, பல துடிப்புமிக்க இளைய வீரர்களின் உயிர் தியாகம் முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவித்தார்.